என் மலர்
நீங்கள் தேடியது "வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்பு"
- தருமபுரி மாவட்டத்தில் வன உயிரினங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
- தரமற்ற விதைநெல்லால் அரூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் விவசாயி களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதி நிதிகள், மற்றும் விவசா யிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்கள் கூறும்போது, நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவம் தொடங்கவுள்ள நிலையில் கரும்பு கொள்முதல் விலையை அரசு அறிவிக்க வேண்டும். வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்சலுக்கு அனுமதிக்க வேண்டும். சின்னாறு(பஞ்சப்பள்ளி) அணையின் உயரத்தை உயர்த்த வேண்டும். நெற்பயிருக்கான காப்பீடு தொடர்பாக நிலவும் பல்வேறு குளறுபடிகளை களைய வேண்டும்.
காட்டுப்பன்றி, மயில் போன்ற வன உயிரினங்களால் விவசா யிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் விரைவாகவும், உரிய அளவிலும் இழப்பீடு வழங்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் தரமற்ற, போலி விதைகள் நடமாட்டம் இருப்பது குறித்து பல மாதங்களுக்கு முன்பே விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்த நிலையிலும் மாவட்ட நிர்வாகம் கண் விழிக்காமல் இருந்ததன் விளைவாக தற்போது தரமற்ற விதைநெல்லால் அரூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வாணியாறு அணைப் பகுதியில் உள்ள பூங்காவை மேம்படுத்த வேண்டும். அலியாளம்-தூள்செட்டி ஏரி பாசன கால்வாய் இணைப்புத் திட்டத்தை தாமதமின்றி நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இவற்றைக் கேட்டுக் கொண்ட மாவட்ட கலெக்டர் கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் இணை இயக்குநர் விஜயா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






