என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுதடைந்த அலுவலகம்"

    • இடிந்து விழும் நிலையில் உள்ளது
    • புதிய கட்டிடம் அமைக்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இரண்டும் தனித்தனியாக ஊரின் மையப்பகுதியில் உள்ளது.

    இந்த அலுவலகமானது கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் மேலாகி உள்ளன. தற்போது இந்த அலுவலகத்தின் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதனால் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுகின்றன. இந்த கட்டிடத்தின் மேல் தளம் விரிசல்கள் ஏற்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் உள்ளது.

    இந்த ஆபத்தான கட்டிடத்தில் தற்போது இரு அலுவலகங்களும் செயல் படவில்லை.

    கிராமத்தில் உள்ள நூலக கட்டத்தின் சிறிய பகுதியில் தற்போது ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே போல் கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    கிராமத்தின் நடு பகுதியில் உள்ள இந்த இரு அலுவலக கட்டிடங்களும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு இந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டி ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகத்தை பயன்பாட்டி ற்கு அளிக்க வேண்டும் என வெளிதாங்கிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×