என் மலர்
நீங்கள் தேடியது "தினந்தோறும் அவரை கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது"
- ஜெயிலில் அடைத்தனர்
- குளியல் அறையில் பிணமாக கிடந்தார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே ஒதியத்தூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 40) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலி (38). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான வசந்தகுமார் மனைவி அஞ்சலியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தினந்தோறும் அவரை கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி அதிகாலை வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்கில் தொங்கியவாறு அஞ்சலி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அஞ்சலி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் வசந்தகுமார் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அஞ்சலி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






