என் மலர்
நீங்கள் தேடியது "அல்லேரி மலைப்பகுதி"
- பூமிக்கு அடியில் தோண்ட தோண்ட வந்தது
- கீழே கொட்டி அழித்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அவர்கள் உத்தரவு பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அல்லேரி மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த சின்டெக்ஸ் டேங்க், தண்ணீர் பேரல்கள் போன்றவகைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் வாலிகள் மூலம் 2000 லிட்டர் சாராய ஊறல்களை தோண்டி எடுத்தனர். பின்னர் மேலே காண்டு வந்து கீழே கொட்டி அழித்தனர்.
மேலும் சாராயத்தை காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் அழித்துவிட்டு பூமிக்கு அடியில் குழி தோண்டி சாராயத்தை காய்ச்ச பதுக்கி வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






