என் மலர்
நீங்கள் தேடியது "வீட்டு சுவர் இடிந்து விபத்து"
- கடந்த சில நாட்களாகவே போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
- நேற்றிரவு இடி-மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
மேலசொக்கநாதபுரம்:
போடி புதூர் போயன்துரை சாலையில் உள்ள ரெயில்வே தண்டவாள லைன் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(45). இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் ரெயில்வே லைன் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர் இலவம்பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்றிரவு இடி-மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் செந்தில்குமாரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவரது குடும்பத்தினர் பக்கத்து அறையில் டி.வி பார்த்து கொண்டிருந்ததால் உயிர்தப்பினர். வீட்டு சுவர் இடிந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாதுகாப்புக்காக உறவினர் வீட்டுக்கு இடம்பெயர்ந்தனர்.






