என் மலர்
நீங்கள் தேடியது "மனமுடைந்த அவர் வீட்டில் தற்கொலை"
- அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதால் வாக்குவாதம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் சின்ன சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தகு மார் (வயது 32), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஹரிப்பிரியா. சாந்தகுமார் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு செல்வதாகவும், அதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சாந்தகு மார் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் கோப மடைந்த ஹரிப்பிரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாந்தகு மாரை திட்டி உள்ளார்.
இதில்மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






