என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்."

    • அவருடைய கையில் ஆங்கில எழுத்தால் பச்சை குத்தப்பட்டிருந்தது
    • கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் கடந்த மாதம் 19-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில், தரைவிரிப்பால் சுற்றப்பட்டு வாலிபர் பிணம் மிதந்தது. அவருடைய கையில் ஆங்கில எழுத்தில் சித்ரா என்றும், மேலும் சில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட் டிருந்தது. அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்த வர், அவரை கொலை செய்த மர்மந பர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

    இறந்தவர் யார் என்பதையும், அவரை கொலை செய்த குற்றவாளி களை கண்டறியவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். பல்வேறு மாவட்டங் களும், பிற மாநிலங்களுக்கும் சென்றும் விசாரணை நடத்தினர்.

    ஆனால் இந்த வழக்கில் எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். வேலூர் மாநகரின் முக் கிய பகுதியாக திகழும் கோட்டையில் தற்கொலை, வழிப்பறி, கொலை நடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது.இதுதொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

    ×