என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்"
- அடிப்படை வசதி கேட்டு கோரிக்கை
- வெறிநாய்கள், பன்றிகள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வேண்டும்
வேலூர்;
காட்பாடி 14-வது வார்டு பகுதியில் இதுவரை எந்த வித வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராதாகிருஷ்ணன் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு குடியிருப்போர் நல சங்க தலைவர் ரங்கநாதன், செயலாளர் கணேஷ், துணைத் தலைவர் கண்மணி ஆகியோர் தலைமை தாங்கினார்.
ராதாகிருஷ்ணா நகர் பகுதியில் சாலை வசதி, கழிவு நீர், கால்வாய், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் மாடுகள், காளைகள் வெறிநாய்கள், பன்றிகள் போன்றவைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து கோஷங்களை எழுப்பினர்.






