என் மலர்
நீங்கள் தேடியது "நவராத்திரி பிரம்மோற்சவ விழா"
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா
- வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது
வேலூர்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த விழாவை காணவும், ஏழுமலையானை தரிசனம் செய்யவும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவது வழக்கம். இதையொட்டி தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.
வேலூர் மண்டல அரசு போக்குவரத்து க்கழகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து தற்போது திருப்பதிக்கு 10 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் வருகிற 23-ந்தேதி மாலை வரை இயக்கப்பட உள்ளன என்று வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.






