என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர்களுக்கு வரவேற்பு"

    • குஜராத் மாநிலம் செல்கின்றனர்
    • அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது

    அணைக்கட்டு:

    கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை செல்லும் மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு பள்ளிகொண்டாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் கன்னியாகுமரி, ஸ்ரீநகர், ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து 3 குழுக்களாக தனித்தனியே புறப்பட்டு இம்மாத இறுதியில் குஜராத் மாநிலம் செல்கின்றனர். தொடர்ந்து, வருகிற 31-ந் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின விழாவில் பங்கேற்கின்றனர்.

    இதையொட்டி பெண்களுக்கு அதிகார மளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய கருத்துகளை மையப்படுத்தி சி.ஆர்.பி.எப். பெண் வீரர்கள், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்கின்றனர்.

    கடந்த 3-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து 25 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்ட 50 பெண் வீரர்கள் பள்ளிகொண்டா வந்தடைந்தனர்.

    அவர்களுக்கு பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறை, அரசு பள்ளி மாணவிகள், சமுக ஆர்வலர்கள், பேரூராட்சி சார்பில் மலர்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் பேரூராட்சி, துணைத் தலைவர் வசிம்அக்ரம், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

    ×