என் மலர்
நீங்கள் தேடியது "தீப்பெட்டி பணி"
- கலெக்டர் உத்தரவு
- பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சா லைகளில் ஏற்படும் தீவிபத்துகளை தவிர்ப்பது மற்றும் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி, விழிப்புணர்வு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் ரசாயனங்கள் கையாளுதல், மருந்து கலவை செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட அளவில் ரசாயனங்களை பயன்படுத்துதல், இருப்பு வைத்தல் மற்றும் உற்பத்தி செய்த பட்டாசு மற்றும் தீ பெட்டிகளை உடனுக்குடன் சேமிப்பு அறைக்கு எடுத்து செல்லுதல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
மேலும் அதிகளவில் ரசாயன கலவை பயன்படுத்துதல் மற்றும் அதிக அழுத்தத்துடன் மருந்து கலவை செலுத்து வதால் ஏற்படும் உராய்வின் காரணமாக பட்டாசு விபத்து ஏற்படுகிறது. எனவே, மருந்து கலவை செய்து செலுத்தும் பணியில் நன்கு பயிற்சி, அனுபவம் பெற்ற தொழிலாளர்களை மட்டுமே பணி அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் தீ விபத்துக்களை தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.






