என் மலர்
நீங்கள் தேடியது "10 மாவட்டங்க ள்தான் போட்டியில் பங்கெடுத்துள்ளன"
- வேலூர் வி.ஐ.டி.யில் நடக்கிறது
- அடுத்த பிறவி இருக்கு மானால் தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் திருக்குறளை படிக்க வேண்டும் என்று டால்ஸ்டாய் கூறினார்
வேலூர்:
வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகம் மற்றும் தமிழியக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவி களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
வேலூர் வி.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தரும், தமிழியக்க தலைவருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
அவர் பேசியதாவது:-
இந்த போட்டியில் 750 மாணவ மாணவிகள் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வியில் பின் தங்கிய வட மாவட்டங்கள் இப்போது மாறிவிட்டதை பார்க்கிறேன். தமிழியக்கம் 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது.
அதில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
1930-களில் காந்தி யடிகள் மாஸ்கோவில் வாழ்ந்து கொண்டிருந்த அறிஞர் டால்ஸ்டாய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் தாம் இந்தியாவில் நடத்தி வரும் போராட்டம் குறித்து அவரது கருத்துக்களை அறிய விரும்பியிருந்தார்.
டால்ஸ்டாய் காந்திக்கு எழுதிய பதில் கடிதத்தில் பாராட்டு தெரிவித்துவிட்டு இந்தியாவுக்கு இது புதிதல்ல, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உங்கள் நாட்டில் ஒரு கவிஞர் தமிழில் எழுதியுள்ளார்.
அதில் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண, நன்னயம் செய்துவிடல் என்ப தைத்தான் நீங்கள் செய்கி றீர்கள் என்று குறிப்பிட்டி ருந்தார். அதுவரை காந்திக்கு திருக்குறளை பற்றி தெரியாது. அதன்பிறகு திருக்குறளை வாங்கி ஆங்கிலத்தில் படித்துவிட்டு எனக்கு அடுத்த பிறவி இருக்கு மானால் தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் திருக் குறளை படிக்க வேண்டும்' என்று கூறினார்.
அப்படிப்பட்ட திருக்குறளைத்தான் நீங்கள் ஒப்புவித்து போட்டியில் வென்றிருக்கீறர்கள். இந்தாண்டு 10 மாவட்டங்க ள்தான் போட்டியில் பங்கெடுத்துள்ளன. அடுத்த முறை எல்லா மாவட்டங்க ளும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மணிமொழி (வேலூர்), வெற்றிசெல்வி (காஞ்சிபுரம்), தமிழியக்கம் வடதமிழக ஒருங்கிணை ப்பாளர் வணங்காமுடி, புலவர் வே. பதுமனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






