என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு ஏற்படும் அபாயம்"

    • சாலையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பழுதான நிழற்குடையால் பொது மக்கள் அவதி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதியில் கடந்த 2002- 2003-ம் ஆண்டு பஸ் நிறுத்த நிழற் குடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பயணிகள் நிழற் குடையானது சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்பொழுது ஒரு சில ஆண்டுகளாக பழுதாகி மிகவும் நிழற்குடையின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் தெரியும் அளவிற்கு மிக மோசமாக இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.

    இந்த நிழற் குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு நகர்ப்புறம் செல்வதற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது மேற்படிப்புக்காக நகர் பகுதிகளுக்கு செல்லவும் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெயில் நேரத்திலும் மழை நேரத்திலும் இந்த நிழற்குடையில்தான் அமர்ந்திருக்க வேண்டி யுள்ளது. தற்பொழுது இந்த நிழற்குடை மிகவும் பழுதாகி உள்ளதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தான் பொதுமக்கள் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருந்து சென்று வருகின்றனர்.

    எனவே இப்பகுதி பொது மக்களின் நலன் கருதி பழுதான நிழற் குடையை அகற்றிவிட்டு புதியதாக நிழற் குடையை அமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×