என் மலர்
நீங்கள் தேடியது "18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள்"
- கலெக்டர் உபகரணங்களை வழங்கினார்
- அறுவை சிகிச்சை, உபகரணங்களுக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்
வேலூர்:-
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கினார்.
மாவட்ட கல்வி அலுவலர் ஜோதீஸ்வரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் , தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.
முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எலும்பு முறிவு சிகிச்சை, மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவைகளுக்கு பரிசோதித்து அறுவை சிகிச்சை, மற்றும் உபகரணங்களுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
மேலும் மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை, இலவச ரெயில் மற்றும் பஸ் பயணச் சலுகை, உதவித் தொகைக்கான பதிவு, முதல் அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு உள்ளிட்ட பணிகளும் நடந்தது.






