என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறிநாய் கடி விழிப்புணர்வு நிகழ்ச்சி"

    • உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • கலந்து கொண்ட அனைவரும் உலக ரேபிஸ் தடுப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டார பொது சுகாதார துறையின் சார்பில் பொங்கலூர் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வெறி நாய் கடி பற்றியும், நாய் கடி தடுப்பூசி பற்றியும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், மருத்துவ அலுவலர்கள் நந்தகுமார், நிவேதா மற்றும் கால்நடை மருத்துவர்கள் உமாசங்கர், ஜெகநாதன் ஆகியோர் எடுத்து கூறினர். மேலும் கலந்து கொண்ட அனைவரும் உலக ரேபிஸ் தடுப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம், துணை தலைவர் ராதாகிருஷ்ணன் . சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி மற்றும் பூமலர்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×