என் மலர்
நீங்கள் தேடியது "நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்"
- உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது.
- சமுதாயத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதில் இருந்து விலகுவது குறித்தும் விளக்கமாக கூறினர்.
உடுமலை :
உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது. திருப்பூர் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியின் திட்ட அலுவலர் நாராயணன் வரவேற்புரை ஆற்றினார். முதல் அமர்வில் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் இன்றைய சமுதாயத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதில் இருந்து விலகுவது குறித்தும் விளக்கமாக கூறினர்.
மேலும் இலவச அலைபேசி எண்களையும் மாணவர்களுக்கு வழங்கினர். மாணவிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் அதில் இருந்து விடுபடுவது குறித்தும் வக்கீல் சத்தியவாணி உரை நிகழ்த்தினார். 2-வது அமர்வாக மதியம் உடுமலை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கோகுல்,ஆனந்த் ஆகியோர் அவசரகால சிகிச்சை,முதல் உதவி மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.மேலும் நாளைய உலகம் மாணவர் கையில் என்ற தன்னம்பிக்கை சொற்பொழிவும் நடைபெற்றது.திருப்பூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட முன்னாள் தொடர்பு அலுவலர் கந்தசாமி என்.எஸ்.எஸ்சின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். நிறைவாக பூலாங்கிணார் அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.






