என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜினாமா மிரட்டல்"

    • ஒரு நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நான் மக்கள் பணி செய்ய இயலாத காரணத்தால் பதவியில் நீடிப்பதில் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
    • ஆளுங்கட்சி நகராட்சி கவுன்சிலர் ஒருவர் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ராஜினாமா மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி 33-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    எனது வார்டுக்குட்பட்ட நகர் உசிலங்குளம் அய்யனார் நகர் மூன்றாம் வீதி சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

    ஏற்கனவே இங்கு நகராட்சி சார்பில் தார் சாலை போட ஆரம்பித்து கைவிடப்பட்டது. நகராட்சி நிர்வாகம் தார் சாலை அமைக்குமா? என்று பொதுமக்கள் என்னை தினசரி கேள்வி கேட்கிறார்கள்.

    அதேபோல் எனது வார்டு பகுதியில் மின்விளக்குகள் பழுது பார்க்க போன் செய்தால் வருகிறேன் என்று சொல்கிறார்கள் ஆனால் வருவதில்லை. நகராட்சி அதிகாரிகள் போனை எடுப்பதில்லை. துப்புரவு தொழிலாளர்களும் சரி வர வருவதில்லை.

    ஒரு நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நான் மக்கள் பணி செய்ய இயலாத காரணத்தால் இந்த பதவியில் நீடிப்பதில் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

    எனக்கு மக்கள் பணி செய்ய ஆர்வம் இருந்தும் எந்த ஒரு நிர்வாகமும் ஒத்துழைப்பு தராத காரணத்தால் இன்னும் ஒரு வாரத்திற்குள் எனது வார்டு பகுதியில் ஏற்கனவே கொடுத்த கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நகராட்சி ஆணையரிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பது என முடிவு செய்துவிட்டேன்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆளுங்கட்சி நகராட்சி கவுன்சிலர் ஒருவர் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ராஜினாமா மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×