என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 43 லட்சம் மதிப்பில் வங்கிக் கடனுதவி"

    • படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
    • நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் வசதி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 20 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 43 லட்சம் மதிப்பில் வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-.

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திடவும், உற்பத்தியை பெருக்கிடவும், ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், மகளிர்கள் சுய தொழில்களை தொடங்கவும் பல்வேறு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி திட்டங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்த ப்பட்டுவருகிறது.

    தமிழ்நாட்டில் தொழில் வளத்தை மேம்படுத்த படித்த பல்வேறு மானிய கடனுதவி திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    நடப்பு நிதியாண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 51 பேருக்கு ரூ.1கோடியே 83 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

    வருகிற 2024 ஜனவரி மாதம் தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநில அளவில் 36ஆயிரத்து 633 நிறுவனங்கள் ரூ.54ஆயிரத்து 950 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் பெற்று தொழில் வளத்தை பெருக்குவதே உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கமாகும்.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 667 நிறுவனங்கள் ரூ.1000 கோடிமதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் பெற இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இது வரையில் 34 நிறுவனங்கள் ரூ.146கோடியே 53 லட்சம் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு துறைகளின் கடனுதவி திட்டங்கள் மூலம் வங்கிகளின் வாயிலாக 8ஆயிரத்து 33 பேருக்கு ரூ.365 கோடி மதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ரவிசந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீ ராம்ஜி குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் (பொறுப்பு)அமுதாராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள்

    கலைகுமார், வடிவேலு, புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்றத் தலைவர்கள் ஹரிணிதில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், தமிழ்ச் செல்வி அசோகன், பேரூராட்சித் தலைவர் நாகராஜன்,தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் கௌரி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கோமதி, மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிற்சங்கத் தலைவர் சந்திரஹாசன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×