என் மலர்
நீங்கள் தேடியது "salemdistrict: மக்களை தேடி மருத்துவம் குறித்தும்"
மருத்துவ மனைக்கு வருகை புரியும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை புள்ளி விபரம்
மகுடஞ்சாவடி
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கள ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மருத்துவமனைக்கு வருகை புரியும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் அறுவை சிகிச்சை விபரம் எந்த நோய்க்காக அதிக பேர் வருகிறார்கள் என்ற புள்ளி விபரம் உள்ளிட்டவை குறித்தும், மக்களை தேடி மருத்துவம் குறித்தும், அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டவை ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து மருத்துவமனை அருகே ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ ஆய்வகம் கட்டிடப் பணி நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி உள்ளிட்டர் உடன் இருந்தனர்.






