என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: 10 உணவு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்கள் 10 Violations of Food Safety Act in Food Establishments"

    • உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு 55 உணவு நிறுவனங்களில் ஆய்வு
    • 9 கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

    சேலம்

    தமிழக சுகாதார செயலாளர் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவுப்படி சேலம் மாவட்டம் ஆத்தூர், எடப்பாடி, தலைவாசல் மற்றும் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் போன்ற பகுதிகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு 55 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 10 உணவு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    அபராதம்

    பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மட்டன் மற்றும் சிக்கன் 74.5 கிலோ, சேமித்து வைக்கப்பட்ட சாதம் 46.2 கிலோ, கெட்டுப்போன மீன்கள் 60 கிலோ, நூடுல்ஸ், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 11.7 கிலோ என மொத்தமாக 193 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் அழிக்கப்பட்டது.இதையடுத்து 12 உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 9 உணவு நிறுவனங்களுக்கு ரூ. 15000 அபராதம் விதிக்கப்பட்டது.

    எச்சரிக்கை

    இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். உணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்கள் கண்டறியப்படும் உணவு நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி கடுமையான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    ×