என் மலர்
நீங்கள் தேடியது "பாம்பை பிடித்த இளைஞர்கள்"
- விஷமுடைய உயிரினத்துடன் விளையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
- வனத்துறையினர் எச்சரிக்கை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது வீட்டில் 4 அடி நீளம் கொண்ட நாகபாம்பு ஒன்று புகுந்துள்ளது.
உடனே அருகில் இருந்த அப்பகுதி இளைஞர்கள் ஒருவர் உதவியுடன் வீட்டில் புகுந்த பாம்பை பிடித்தனர்.
பின்னர் அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர். பாதுகப்பு கருவிகள் இல்லாமலும், உரிய பயிற்சி இல்லாமலும் பாம்புகளை பிடிக்கும் போது அவை கடித்தால் உயிர் இழக்க நேரிடும் எனவே விஷமுடைய பாம்புகளை பார்த்தால் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கவும்.
இது போல் தன்னிச்சையாக செயல்பட்டு விஷமுடைய உயிரினத்துடன் விளையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துைறயினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






