என் மலர்
நீங்கள் தேடியது "salemdistrict: மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு Awareness among hill villagers"
- தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது.
- மலை கிராமங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்காடு
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது. இதையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் டெங்கு பரவாமல் இருக்க சுகாதார துறையினர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் ஜெமினி உத்தரவின் பேரில் வட்டார மருத்துவஅலுவலர் தாம்சன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், ராஜேஷ், புரு சோத்தமன் மற்றும் பணியா ளர்கள் கொண்ட குழு ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது வீடுகளை சுற்றி மழைநீர் தேங்க கூடியபொருட்களை அப்புறப்ப டுத்தினர். மேலும் மலை கிராம மக்களுக்கு டெங்குகொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி னர். பொது இடங்களிலும் தண்ணீர் தேங்க கூடிய பொருட்களை அழித்தனர்.






