என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச அந்தஸ்து"
- பல்வேறு நாடுகளை சேர்ந்த, 800 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உறுப்பினராக உள்ளன.
- கண்காட்சிகள் தொடர்பான தகவல்கள் ஆகியவை உறுப்பினர்களுக்கு இந்த கூட்டமைப்பால் உடனுக்குடன் பகிரப்படுகிறது
திருப்பூர் :
நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்சில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 800 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உறுப்பினராக உள்ளன.
சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப பகிர்வு, சர்வதேச அளவில் நடக்கும் கண்காட்சிகள் தொடர்பான தகவல்கள் ஆகியவை உறுப்பினர்களுக்கு இந்த கூட்டமைப்பால் உடனுக்குடன் பகிரப்படுகிறது.
இந்த கூட்டமைப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுப்பினராக இணைந்துள்ளது. இதனால், சர்வதேச சந்தைகளில் ஒவ்வொரு அசைவுகளும், திருப்பூருக்கு உடனுக்குடன் தெரியவரும் என ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-
அமெரிக்க நிறுவனங்கள் அதிகம் உறுப்பினராக உள்ள டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்சில், சர்வதேச அளவிலான நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கமும், உறுப்பினராக இணைந்துள்ளது.
உலக அளவில் 800 உறுப்பினர்கள் இருப்பதால், சர்வதேச கண்காட்சி, தொழில் வளர்ச்சி வர்த்தக சந்திப்பு, மூலப்பொருள் சப்ளை தொடர்பான விபரம் ஆகியவை உடனுக்குடன் தெரியவரும்.திருப்பூரில் நடக்க உள்ள 50வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடர்பான விபரத்தை முதன்முதலாக டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் தளத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.






