என் மலர்
நீங்கள் தேடியது "கடன்களை வழங்குவதற்கான இலக்கு"
- பல்வேறு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
- மாதாந்திர கடனுதவி வழங்கும் முகாமில் 244 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.20.70 கோடி வங்கி கடன், அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் மாதாந்திர முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் முன்னிலையில் நடை பெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
பெண்களின் கூட்டு முயற்சியில் லாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் அப்பெண்க ளின் குடும்ப வருமானத்தை யும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வறுமையிலிருந்து விடுபடச் செய்வதற்காகவும் மகளிர் திட்டத்தின் மூலம் சுழல்நிதி கடன், பொருளாதார கடன், தொழிற்கடன், வங்கிக் கடன்கள் போன்ற பல்வேறு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இக்கடனுதவி களை பெண்கள் பயன்படு த்தி தங்களது பொருளா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மாதாந்திர கடனுதவி வழங்கும் முகாமில் 244 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.20.70 கோடி வங்கி கடன், அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும் 2023-2024-ஆம் ஆண்டிற்கு 10713 குழுக்களுக்கு ரூ.594 கோடி கடனுதவி வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இன்று வரை 5334 குழுக்களுக்கு ரூ.344.34 கோடி கடனுதவி வழங்கப்ப ட்டுள்ளது. மீதமுள்ள இலக்கினை டிசம்பர் மாத த்திற்குள் எட்டிட நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆபரண நகை தயாரிப்பதற்கு பயிற்சி பெற்ற 30 மாணவிகளுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் சுய தொழில் மேற்கொள்ள ரூ.1,52,000 க்கான வங்கி கடன் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஆரோக்கிய சுகுமார், முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






