என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன வாகனம்"

    • சாலைகளை சுத்தம் செய்யும் பணிக்கு நவீன வாகனங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.
    • சாலையில் பறந்து வந்து விழும் குப்பை கழிவுகளையும் இந்த எந்திரம் அகற்றிவிடும்.

    திருப்பூர்:

    திருப்பூர் நகரப்பகுதி சாலைகளை சுத்தம் செய்யும் பணிக்கு நவீன வாகனங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.அனைத்து பிரதான சாலைகள் மையத்தடுப்புடன் உள்ளன. இவற்றின் மையப்பகுதிகள் மற்றும் பிற ரோடுகளின் இருபுறத்திலும் அதிக அளவில் மண் சேர்கிறது. மண்ணை அப்புறப்படுத்தி, சாலைகளை சுத்தப்படுத்துவது தூய்மைப்பணியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

    காற்று வீசும் நேரங்களில் இந்த மண் குவியல் காற்றில் பறந்து சென்று வாகன ஓட்டிகளை அவதிப்படுத்துகிறது. மழை நாட்களில் இது சேறாக மாறி, வாகனங்கள் இயக்கத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    இதற்கு தீர்வு காணும் விதமாக தற்போது மாநகராட்சி பகுதியில் தூய்மைப்பணிக்கு டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம் நவீன எந்திரங்களை களம் இறக்கியுள்ளது.இந்த வாகனம் வாயிலாக எளிதாக சாலை பகுதிகள் தூய்மைப்படுத்தப்படும். சாலைகளிலும், ரோட்டோரங்களிலும் சேகரமாகும் மண்ணை அகற்றி சுத்தம் செய்யும் பணியை இந்த வாகனங்கள் மேற்கொள்ளவுள்ளன.

    மேலும் சாலையில் பறந்து வந்து விழும் குப்பை கழிவுகளையும் இந்த எந்திரம் அகற்றிவிடும். தற்போது முதல் கட்டமாக இரு வாகனங்கள் வந்துள்ளன. இந்த வாகனம் 200 ஊழியர்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ரோடு தூய்மைப்பணியை செய்து முடிக்கும் திறன் கொண்டது.

    இந்த வாகனங்கள் பயன்பாட்டை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். 

    ×