என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒட்டு பொறி"

    • சிறிய உடல் அமைப்பை கொண்ட பூச்சிகள் பலவித வண்ணங்களால் கவரப்படும் குணமுள்ளவை
    • ஏக்கருக்கு 25 என்ற அளவிலும் ஒட்டுப்பொறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன

    உடுமலை : 

    தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகிறது.இதை கட்டுப்படுத்த, வண்ண ஒட்டுப்பொறிகளை பயன்படுத்தலாம். எந்த வண்ண ஒட்டுப்பொறி எதற்கு பயன்படுத்தப்படுகிறது என கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ், விதைச்சான்று அலுவலர் நந்தினி விளக்கம் அளித்தனர்.

    கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கூறியதாவது:-

    காற்றினால் எளிதில் அடித்துச் செல்லப்படும் சிறிய உடல் அமைப்பை கொண்ட பூச்சிகள் பலவித வண்ணங்களால் கவரப்படும் குணமுள்ளவை. வண்ண அட்டைகளில் ஒட்டும் பசை (ஆமணக்கு எண்ணெய், வாசலின் கிரீஸ்) தடவப்பட்டு பூச்சி கட்டுப்பாட்டுக்காகவும், பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

    பூச்சிகளை கண்காணிக்க ஏக்கருக்கு 25 என்ற அளவிலும் ஒட்டுப்பொறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒட்டுப்பொறிகள் அடிப்பாகம், பயிர்களின் நுணி பாகத்தில் பொருத்துமாறு வயல்களில் பொருத்த வேண்டும்.மஞ்சள் நிற பொறியில் வெள்ளை ஈ, அசுவினி, இலைபேன், சுருள் பூச்சிகளும், நீலநிற பொறியில் இலைப்பேன், முட்டைகோசு ஈ, பருத்திக்காய் கூண்டு வண்டு பூச்சிகள் கவரப்படுகின்றன.

    ஊதா நிற பொறியில் இலைப்பேன், பூ பேன், வெள்ளை நிற பொறியில் இலைப்பேன், ஆரஞ்சு நிற பொறியில் தத்துப்பூச்சிகளும் கவரப்படுகின்றன.வண்ண ஒட்டுப்பொறிகளை 10 நாட்களுக்கு ஒரு முறை கண்காணித்து தேவைப்படும் ஒட்டும் திரவத்தினை மீண்டும் தடவ வேண்டும். சிறிய பிளாஸ்டிக் குடம், பெயின்ட் காலி டப்பா, பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் தார்பாலின்களை தேவையான அளவுக்கு எடுத்துக்கொண்டு ஒட்டும் திரவம் தடவி, ஒட்டு பொறியாக பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×