என் மலர்
நீங்கள் தேடியது "இரு சக்கர வாகனம் மோதி"
- கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் சாலையை கடந்து செல்லும்போது இரு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார்
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கீழ அக்ரஹரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 65). இவர் கரூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் சாலையை இவர் கடந்து செல்லும்போது கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சிந்தலவாடி ஊராட்சி, மகிளிபட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (26) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி படுகாயமடைந்தார்.கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உடலை கைப்பற்றிய மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






