என் மலர்
நீங்கள் தேடியது "ஊராட்சி கட்டிடம்"
- கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
- மழை காலத்தில் கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிந்து ஆவணங்கள் சேதம் அடைந்து வருகின்றன.
திருத்தணி:
திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
மேலும், மழை காலத்தில் கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிந்து ஆவணங்கள் சேதம் அடைந்து வருகின்றன.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள அரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக அலுவலகம் கட்டிதடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






