என் மலர்
நீங்கள் தேடியது "விமான பயணி பலி"
- விமானத்தில் பயணித்த தேவானந்த் திவாரி என்ற பயணி ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
- விமான கேப்டன், அந்த விமானத்தை உடனடியாக நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க திட்டமிட்டார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு இன்டிகோ விமானம் நேற்றிரவு புறப்பட்டு சென்றது.
சிறிது நேரத்திலேயே விமானத்தில் பயணித்த தேவானந்த் திவாரி (வயது62) என்ற பயணி ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து ரத்த வாந்தி எடுப்பதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து விமான கேப்டன், அந்த விமானத்தை உடனடியாக நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க திட்டமிட்டார்.
அதன்படி விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் மருத்துவக்குழு வினர் தேவானந்த் திவாரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேவானந்த் திவாரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அவர் ஏற்கனவே காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.






