என் மலர்
நீங்கள் தேடியது "தவறிவிழுந்தவர் படுகாயம்"
- படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- முதற்கட்ட விசாரணையில் ரெயிலில் இருந்து தவறிவிழுந்த நபர் ராஜபாளையத்தை சேர்ந்தவர்.
வடமதுரை:
அய்யலூர் அருகே கீரனூர் பகுதியில் சென்னை நோக்கி சென்ற ரெயிலில் இருந்து ஒருவர் தவறிவிழுந்து படுகாயமடைந்தார். இதுகுறித்து அவரது உறவினருக்கு அவர் செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். அவர் 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து அந்த நபர் செல்போன் சிக்னலை வைத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருப்பதி மற்றும் உமா ஆகியோர் அவரை ரெயில் தண்டவாள பகுதியில் 3 மணிநேரம் தேடி கண்டுபிடித்தனர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ரெயிலில் இருந்து தவறிவிழுந்த நபர் ராஜபாளையத்தை சேர்ந்த பூபதி(40) என தெரியவந்தது.
மேலும் அவர் ராஜபாளையத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்ததும், கீரனூர் பகுதியில் எதிர்பாராத விதமாக தவறிவிழுந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து பூபதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






