என் மலர்
நீங்கள் தேடியது "கனிவாக அணுகி குறைகளை கேட்டறிய வேண்டும்"
- பதிவேடுகளை பார்வையிட்டு, சரிவர பராமரிக்க வேண்டும்
- கனிவாக அணுகி குறைகளை கேட்டறிய அறிவுறுத்தல்
வேலூர்:
சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் எஸ்பி மணிவண்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகளை பார்வையிட்டு, சரிவரபரா மரிக்க வேண்டும்.
மேலும், புகார் மனு அளிக்க வருபவர்களை, போலீஸ் நிலைய வரவேற்பாளர்கள் கனிவாக அணுகி குறைகளை கேட்டறிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக் கள் குறித்து கேட்டறிந்தார். அதன் மீதான உடனடி விசாரணை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பதிவான வழக்குகளை விரைந்து விசாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார், டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






