என் மலர்
நீங்கள் தேடியது "பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்"
- அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
- புதிய சங்கம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
தாராபுரம் :
பால் உற்பத்தி மற்றும் பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநர் கடந்த வாரம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பால் வள துணைப் பதிவாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.அதன்படி அனைத்து சரக முதுநிலை ஆய்வாளர்கள் இதுகுறித்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சங்கங்கள் இல்லாத பகுதிகள், புதிய சங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய சங்கம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல் கறவை மாடுகளுக்கான கடன் வழங்க முகாம் நடத்தி கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய வங்கிகளை அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக்கடன் வழங்க நிர்ணயித்த இலக்கை அடைய வேண்டும். சரக வாரியாக குறைந்த பட்சம் ஒரு கடன் வழங்கும் முகாமாவது நடத்த வேண்டும்.அனைத்து உறுப்பினர்களுக்கும் பால் கொள்முதல் விவரங்களை உடனே வழங்க வேண்டும். கொள்முதலுக்கான தொகை ஆன்லைன் வாயிலாக வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தி பால் வள துணை பதிவாளர் அலுவலகம் மூலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர், ஒன்றிய பொது மேலாளர் மற்றும் கூட்டுறவு சங்க செயலாட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பால் வள முதுநிலை ஆய்வாளர்கள் இதற்கான பணிகளை துவக்கி உள்ளனர்.






