என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுனர் உரிமங்கள்"

    • நவீன சாலை சூழ்நிலை, வாகன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஓட்டுனர் பயிற்சியின் தரத்தை மேம்படுத்தி அமல்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி, ஆக. 14-

    தமிழ்நாடு ஓட்டுநர் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜெயபாரத் முரளி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தென்காசி வைகை குமார், பொருளாளர் ராம்குமார், மாநில துணை தலைவர் செல்வராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாகவும், இன்றைய நவீன சாலை சூழ்நிலை, வாகன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஓட்டுனர் பயிற்சியின் தரத்தை மேம்படுத்தி வழங்குவதற்கான முறையினை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    அனைத்து வாகனங்களு க்கான ஓட்டுனர் உரிமங்களை பெறுவதற்கு முன் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் மூலம் ஓட்டுநர் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்துவது, ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி சலுகை வழங்க அரசை வலியுறுத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    மேலும் மாநில தலைவராக ஜெயபாரத் முரளிதரன், மாநில செயலாளராக தென்காசி வைகை குமார், மாநில பொருளாளராக ராம்குமார், மூத்த துணை தலைவராக ஈரோடு ராஜா ஆகியோர் தொடர்ந்து அதே பொறுப்பில் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

    நிகழ்ச்சியில் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    ×