என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னர் பெரும்பிடுகு சிலை"

    • விருதுநகர் மாவட்டத்தில் யாத்திரை சென்ற போது மன்னர் பெரும்பிடுகு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார்.
    • ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டத்தில் சிக்கியிருந்த அண்ணாமலை அசரவில்லை.

    பெரிய அளவில் மக்கள் திரண்டு எதிர்த்தால் தலைவர்கள் விலகி ஒதுங்கி சென்று விடுவார்கள். ஆனால் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திரண்டு எதிர்த்த கூட்டத்தை பார்த்து மிரண்டு போகாமல் ஐ.பி.எஸ். அதிகாரிக்கே உரிய பாணியில் கெத்து காட்டி தகர்த்து சாதித்தது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. என் மண் என் மக்கள் யாத்திரை சென்று கொண்டி ருக்கும் அண்ணா மலை, விருதுநகர் மாவட்டத்தில் யாத்திரை சென்ற போது மன்னர் பெரும்பிடுகு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார்.

    ஆனால் முத்த ரையர் சமூகத்தினர் திரண்டு தங்களை தி.மு.க. வும் புறக்கணி க்கி றது. பா. ஜனதா தலைவர் அமித்ஷா ராமேசு வரத்துக்கு வந்த போதும் மதிக்க வில்லை என்று ஆவே சத்துடன் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளே விட மாட்டோம் என்று அரண்போல் தடுத்து நின்றனர். எங்கே மோதல் வெடித்து விடு மோ என்ற பரபரப்பு நிலவியது.

    ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டத்தில் சிக்கியிருந்த அண்ணாமலை அசரவில்லை. தனக்கே உரிய பாணியில் 'அண்ணா வழியை விடுங்க ண்ணா நான் உங்களுடன் பேச வரவில்லை. விதண்டாவாதம் பண்ணாதீர்கள். நான் மன்னருக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறேன். திராவிட கட்சிகள் போல் நாங்கள் இல்லை. உணர்ந்தால் உள்ளே விடுங்கள்' என்று பேசியதும் ஆவேசத்துடன் தடுத்து நின்றவர்கள் விலகி உள்ேள விட்டனர். மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கி ருந்து புறப்பட்டனர். மலன்னா சும்மாவா... என்று உடன் சென்றவர்களும் கெத்துடன் பயணத்தை தொடர்ந்தார்கள்.

    ×