என் மலர்
நீங்கள் தேடியது "துவக்கம்"
- அரியலூரில் ஏலாக்குறிச்சி வரையிலான புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிப்பட்டாக்காடு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா முன்னிலை வகித்தார். இந்த நகர பஸ் தடம் எண் 22ஏ அரியலூர் - ஏலாக்குறிச்சி வழிதடத்தில் வல்லாகுளம், சிலுப்பனூர் இடையே ஆண்டிப்பட்டாக்காடு பிரிவு சாலையிலிருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தினை தொட்டு இயக்கப்படும். இந்த பஸ் காலை 7.50 மணிக்கு ஏலாக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு அரியலூரை சென்றடையும். மீண்டும் இந்த பஸ் மாலை 5.25 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு ஏலாக்குறிச்சியை சென்றடையும். இதன் மூலம் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த பயனடைவார்கள்






