என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது."

    • டிரைவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    சித்தூரில் இருந்து மோட்டார் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீ பெரம்பத்தூருக்கு இன்று காலை தனியார் கம்பெனி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஹைவே பெட்ரோல் ஊழியர்கள் வந்தனர். பின்னர் 2 கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னரை அப்புறப்படுத்தினர்.

    இதில் டிரைவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×