என் மலர்
நீங்கள் தேடியது "பேனா நினைவு சின்னம் வழக்கு"
- சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
- தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்ததோடு இவ்வழக்கில் அரசு சார்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், பேனா நினைவு சின்னம் உட்பட அனைத்து கட்டுமானங்களை தடை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்ததோடு இவ்வழக்கில் அரசு சார்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.






