என் மலர்
நீங்கள் தேடியது "கூழ் வார்த்தல் நிகழ்ச்சி"
- மலர்களாலும், ஆபரணங்களாலும் அலங்காரத்துடன் அம்மன் காட்சியளித்தார்.
- தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ நாகம்மா கோவிலில் சிறப்பு பூஜைகளும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஓசூர் சின்ன எலசகிரி காமராஜர் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாகம்மா கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆடி மாதம மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாகம்மா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முன்னதாக மூலவர் நாகம்மாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மலர்களாலும், ஆபரணங்களாலும் அலங்காரத்துடன் அம்மன் காட்சியளித்தார். பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து நாகம்மாவுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் குழந்தைகள் முதல் பெண்கள் பெரியவர்கள் என திரளான பக்தர்கள் வந்திருந்து அம்மனுக்கு கூழ் வார்த்து நேர்த்திக்கடன் செலுத்தி பிரசாதம் பெற்றுச் சென்றனர்.






