என் மலர்
நீங்கள் தேடியது "உரிமைத்திட்டத்தில் திருநங்கைகள்"
- வீட்டுமனை ப்பட்டா வேண்டி 12 பேரும், காவல்துறை பணி வேண்டி ஒருவரும், கல்விக்கடன் வேண்டி ஒருவரும், அடை யாள அட்டை வேண்டி ஒருவரும், சுயதொழில் தொடங்க கடன் வேண்டி இருவரும் என வெவ்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர்.
- மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திருநங்கைகளை இணைத்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி வழங்க ப்பட்டதற்காகவும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு திருநங்கைகளுக்கான குறை களை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாதந்தோறும் இதுபோன்ற முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனியில் நடை பெற்ற முகாமில் 20 திரு நங்கைகள் கலந்து கொண்ட னர்.
இதில் வீட்டுமனை ப்பட்டா வேண்டி 12 பேரும், காவல்துறை பணி வேண்டி ஒருவரும், கல்விக்கடன் வேண்டி ஒருவரும், அடை யாள அட்டை வேண்டி ஒருவரும், சுயதொழில் தொடங்க கடன் வேண்டி இருவரும் என வெவ்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர். அப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திருநங்கைகளை இணைத்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி வழங்க ப்பட்டதற்காகவும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
தாங்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, பி.ஆர்.ஓ நல்லதம்பி, சமூக நலஅலுவலர் சியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






