என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவை அமைப்பினர்"

    • இந்த பதிவை கண்டவுடன் அவரது உறவினர்கள் தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டு முதியவரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டனர்.
    • இதனையடுத்து தருமபுரி சேவை அமைப்பிற்கு முதியவரின் உறவினர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், செம்மணஹள்ளி அருகே உள்ள ஒட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் மாதப்பன் மூக்கப்பகவுண்டர்.

    இவர் இரண்டு வருடங்களாக ஆதரவின்றி சத்தியமங்கலம் பகுதியில் இருப்பதை சமூக வலைத்தள ங்களில் தருமபுரி அமைப்பி னர் பதிவு செய்திருந்தனர்.

    இந்த பதிவை கண்டவுடன் அவரது உறவினர்கள் தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டு முதியவரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டனர்.

    சத்தியமங்கலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜார்ஜ் உதவியுடன் முதியவரை மீட்டு, தருமபுரி நகர போலீஸ் ஸ்டேசன் சப்-இன்ஸ்பெக்டர் இளமதி தலைமையில் முதியவரை அவரது உறவினர் எர்ரப்பட்டியை சேர்ந்த மாணிக்கத்திடம் ஒப்படைத்தனர்.

    இதனையடுத்து தருமபுரி சேவை அமைப்பிற்கு முதியவரின் உறவினர்கள் நன்றிகளை தெரிவித்தனர். 

    ×