என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்திகிராம மாணவர்கள்"

    • பசுபிக் பிராந்தியத்துக்கான பன்னாட்டு கூட்டுறவு முகமை, மலேசியாவில் நடைபெறும் 4-வது இளைஞர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர்.
    • கடந்த ஆண்டு 22 மாணவர்கள் இத்துறை சார்பில் வேலை வாய்யப்பு பெற்றுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கூட்டுறவுத்துறை செயல்ப ட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக பல்கலைக்கழக அளவில் கூட்டுறவை பாடமாக வழங்கியது இத்துறை மட்டுமே. இந்த துறை 6 சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. கல்வி மட்டுமின்றி பல்வேறு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக தேசிய கூட்டுறவு கொள்கை தயாரித்தல், உன்னதபாரத இயக்கம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி திட்டங்களை மதிப்பீடு செய்தல், செஞ்சு லுவை சங்கம் போன்ற பணிகளை தேர்ந்தெடுக்க வும் செயல்பட்டு வருகின்ற னர்.

    கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற 17வது தேசிய கூட்டுறவு மாநாட்டில் முதுகலை மாணவர் ஒருவர் பங்கேற்றார். மேலும் 3 முதுகலை மாணவர்கள் பசுபிக் பிராந்தியத்துக்கான பன்னாட்டு கூட்டுறவு முகமை, மலேசியாவில் நடைபெறும் 4-வது இளைஞர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் தேசிய அளவில் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படு கின்றனர்.

    இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது. இந்த ஆண்டு ரெப்கோ நுண்கடன் நிறுவ னத்தில் 23 மாணவர்கள் உள்பட பலர் வெவ்வேறு வங்கி பணிக்கு தேர்வாகி உள்ளனர். கடந்த ஆண்டு 22 மாணவர்கள் இத்துறை சார்பில் வேலை வாய்யப்பு பெற்றுள்ளனர்.

    ×