என் மலர்
நீங்கள் தேடியது "கபடி வீராங்கனைகளுக்கு வரவேற்பு"
- தொடர்ந்து 8-வது முறையாக தங்கப்பதக்கம் பெற்ற ஒட்டன்சத்திரம் திரும்பிய கபடி அணி வீராங்கனை களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
- திறந்தவெளி வாகனத்தில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டத்தோடு ஊர்வலமாக ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் வரை அழைத்து வந்து பாராட்டு தெரிவித்தனர்.
சத்திரப்பட்டி:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 8-வது முறையாக தங்கப்பதக்கம் பெற்ற ஒட்டன்சத்திரம் திரும்பிய கபடி அணி வீராங்கனை களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2022-23-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் சென்னையில் நடை பெற்றது.
பொதுப்பிரிவு கபாடி போட்டிகள் 21.07.2023 முதல் 25.07.2023 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட ஒட்டன்சத்திரம் பெண்கள் அணி தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்று பரிசுத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை வரவேற்கும் விதமாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன்கோட்டை யில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டத்தோடு ஊர்வலமாக ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் வரை அழைத்து வந்து பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் அமெச்சூர் கபாடி கழக நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், கபாடி குழு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






