என் மலர்
நீங்கள் தேடியது "காகிதப்பட்டறை மலையில் நிலம் அளவீடு"
- சாலை அமைக்க தீவிரம்
- இட வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட பீஞ்சமந்தை மலை ஊராட்சி, அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.
அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2 எக்டர் நிலத்திற்கு 6.4 எக்டர் அளவான மாற்று இடத்தை வருவாய் துறை மூலம் அல்லேரி மலையில் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட அந்த இடம் எங்களுக்கு வேண்டாம்.
தற்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது.
எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.
இதையடுத்து வனத்துறையினருக்கு இடம் வழங்க, வருவாய்த் துறையினர் வேலூர் காகிதபட்டறை பகுதியில் உள்ள மலைைய தேர்வு செய்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினருடன், வனத்து றையினர் இணைந்து காகிதப்பட்டறை மலையில் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நடந்து சென்று கலெக்டர் ஆய்வு
வனத்துறைக்கு இடம் அளந்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அல்லேரி மலையில் சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
வரதலம்பட்டு மலை கிராம அடிவாரத்தில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்லேரி மலை உச்சிக்கு கலெக்டர் நடந்து சென்று, எந்த இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
சாலையை அடித்து செல்லாத வகையில் மழை நீரை எவ்வாறு அப்புறப்ப டுத்துவது, வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் அளவிற்கு இட வசதி உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரேகாஆனந்தன், துணை தலைவர் கம்சலா சுந்தரேசன், அலாலேரி கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உள்ளிட்டோர் உள்ளிட்டனர்.






