என் மலர்
நீங்கள் தேடியது "லாரி சிக்கியது"
- பெங்களூரிலிருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு லாரியை போலீசார் சோதனை செய்த போது அதில் ரூ.70 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது.
- அந்த மதுபான பாட்டில் பாரம் அடங்கிய லாரியை போலீசார் கைப்பற்றி பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கக்கனூர் சோதனைச் சாவடியில், பாகலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக பெங்களூரிலிருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு லாரியை போலீசார் சோதனை செய்த போது அதில் ரூ.70 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது.
இந்த மதுபானங்கள் சென்னை அம்பத்தூருக்கு தனியார் சார்பில் கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்தது. மேலும் அதை கொண்டு வந்ததற்கான ஆவணங்களும் சரியான முறையில் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த மதுபான பாட்டில் பாரம் அடங்கிய லாரியை போலீசார் கைப்பற்றி பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், மதுபான பாட்டில் ஏற்றி வந்த லாரி போலீசாரிடம் பிடிபட்ட தகவல் அறிந்து, ஓசூர் ஆயத்தீர்வை துறை அதிகாரி சிதம்பரம், பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று, பிடிபட்ட மதுபான பாட்டில்களுக்கு உரிய வரியை, தனியார் செலுத்திவிட்டனர் என்று கூறி, அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பின்னர், மாலையில் அந்த மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி விடுவிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






