என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பங்கள் பதிவு"

    • பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    விண்ணப்பங்கள் பதிவு

    இந்த திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி இன்று தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.

    மாநகராட்சி பகுதியில் உள்ள 68 ரேசன் கடைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 38 கடைகள், ஊராட் சிகளில் 312 கடைகள் என மொத்தம் 418 கடைகளுக்கு 397 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு முகாம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    ஒரே நேரத்தில் மக்கள் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே தெரு, நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டது.

    இருப்பினும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் சில இடங்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது.

    கூட்டம்

    பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு விண்ணப்பங்களை கொடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேலூர், சலவன்பேட்டை பள்ளியில் நடந்த முகாமில் ஏரளமான பெண்கள் குவிந்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கூட்டத்தை கட்டுப்படுத்தி, அனைவரும் வரிசையில் நின்று விண்ணப்பம் வழங்குமாறு அறிவுறுத்தினர்.

    மேலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி 2-வது கட்டமாக அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்க உள்ளது.

    ×