என் மலர்
நீங்கள் தேடியது "அதிசய கன்றுக்குட்டி"
- சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தாயின் வயிற்றில் இருந்து கன்றுவை பிரித்து எடுத்தனர்.
- 2 தலை, 7 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர்
பழனி:
பழனி அருகே பெரியம்மாபட்டி புலியம்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவரது எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் வெகு மணி நேரம் சிரம பட்டது.
இதனைத் தொடர்ந்து பெருமாள் புதூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டர் முருகன் தலைமையில் அம்பிளிக்கை கால்நடை டாக்டர் ஜூபைர் அகமது மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தாயின் வயிற்றில் இருந்து கன்றுவை பிரித்து எடுத்தனர்.
அந்த கன்றுக்கு 2 தலை, 7 கால்கள், 2 வால் என அனைத்தும் ஒட்டிய நிலையில் காணப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இந்த அறுவை சிகிச்சையின்போது கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜா மற்றும் முத்துச்சாமி மற்றும் குழுவினர் உடன் இருந்தனர்.






