என் மலர்
நீங்கள் தேடியது "பிட்டர் பலி"
- ஓடைப்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் தானாக விழுந்து பலத்த காயமடைந்தார்.
- மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பழைய கரூர் சாலை என்.எஸ். நகரை சேர்ந்தவர் நாகராஜ் (52). பிட்டர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஓடைப்பட்டியில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு ஓடைப்பட்டியில் இருந்து என்.எஸ். நகருக்கு டூவீலரில் நாகராஜ் சென்றார்.
ஓடைப்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் தானாக விழுந்து பலத்த காயமடைந்தார். இவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






