என் மலர்
நீங்கள் தேடியது "ஆரம்ப சுகாதாரம் ஆய்வு"
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலையில் உண்டு உறைவிட பள்ளி, விடுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடிரென பார்வையிட்டு ஆய்வு செய்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நல உதவி திட்டங்களை வழங்கு வதற்காக நேற்று முன்தினம் வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு ஏலகிரி மலையில் தங்கினார்.
அதன் பிறகு நேற்று காலை திடிரென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு கிரிக்கெட், வாலிபால், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகர ணங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அத்தனாவூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவர்கள் குறித்தும் அவர்களுடைய பணிகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து விஷ பூச்சிகள் பாம்பு போன்ற பல்வேறு விஷப்பூச்சிகளுக்கு மருந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டது உள்ளதா என்று ஆய்வு செய்து ஏலகிரி மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனையில் 24 மணி நேரமும் சேவை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதில் நெடுஞ்சா லைத்துறை அமைச்சர் எ.வ வேலு, மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலர் ட்ரேஷ் அகமத், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், அரசு மருத்துவர் சுபாஷிணி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.






