என் மலர்
நீங்கள் தேடியது "பிரச்சினைகள் ஏராளம்"
- சின்னமனூர் அருகில் உள்ள மேகமலை ஹைவேஸ் பேரூராட்சி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஹைவேஸ் பேரூராட்சி மலைப்பகுதி என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்களும் வாங்குவதற்கு ஹைவேஸ் பேரூராட்சியில் அலுவலகம் இல்லாததால் அங்கிருந்து 50 கி.மீ தூரமுள்ள உத்தமபாளையம் செல்லும் நிலை உள்ளது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மேகமலை ஹைவேஸ் பேரூராட்சி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஹைவேஸ் பேரூராட்சி மலைப்பகுதி என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே போக்குவரத்து உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஞானம் என்பவர் கூறியதாவது:-
இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்களும் வாங்குவதற்கு ஹைவேஸ் பேரூராட்சியில் அலுவலகம் இல்லாததால் அங்கிருந்து 50 கி.மீ தூரமுள்ள உத்தமபாளையம் செல்லும் நிலை உள்ளது. இதனால் ஒரு நாள் அவர்களது வேலையை விட்டு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே ஹைவேவிஸ் பகுதியில் பேரூராட்சி அலுவலகம் அமைத்து தர வேண்டும்.
மணலாறு- மகாராஜா மெட்டுவரை சாலை வசதிகள் இதுவரை செய்து தரவில்லை. எனவே உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான சமுதாயக்கூடம் சேதம் அடைந்து உள்ளது. இதை சரி செய்து தர வேண்டும்.
ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள வணிக வளாகத்தில் சுமார் 14 கடைகள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த வணிக வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும்.
சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் தங்கும் விடுதியில் முறையான அலுவலர்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்களே அலுவலர் பணியை பார்த்து வருகிறார்கள்.
ரேசன் கடைகளில் விலை இல்லா அரிசி மற்ற பொருள்கள் சரியான முறையில் விநியோகிக்க படுவதில்லை. இதை நம்பி வாழும் கூலி வேலை செய்யும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஹைவேவிஸ் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டி பயன் பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இக்கட்டிடத்தை உடனடியாக பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவருக்கும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வுக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






