என் மலர்
நீங்கள் தேடியது "மைதானம் அமைக்க நிலம்"
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
- ஜாதிசான்றிதழ் வழங்குவதில் சற்று பின்தங்கி உள்ளது
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு ஆகியோர் தலைமையில் நடந்தது.
எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
மாவட்டத்தில் பல துறைகள் சிறப்பாக செயல்படுகிறது. சிலை துறைகளின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஜாதிசான்றிதழ் வழங்குவதில் சற்று பின்தங்கி உள்ளது.
இதனை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி விரைந்து வழங்க வேண்டும். மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
பயோமெட்ரிக் கருவிகள் தேவையான அளவு உள்ளதா எனவும், தேவை இருப்பின் தெரிவித்தால் விரைந்து வழங்கப்படும்.
மேலும் ஏலகிரிமலையில் கட்டப்படும் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளையும், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கதுறை அரசு செயலாளர் டாக்டர் டேரேஸ் அகமது, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு மற்றும் அனைத்து துறை அதிகாரிள் கலந்து கொண்டனர்.






